‘Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom’ மற்றும் 'Forts of Tamil Nadu: A Walk-Through' என்ற தலைப்பிலான இரண்டு விளக்கப் படப் புத்தகங்களை (காபி மேசை புத்தகம் ) தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.
15வது வேளாண்மையில் தலைமைத்துவத்திற்கான விருதுகள் குழுவினால் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண்மைக்கான மாநில விருதினை மகாராஷ்டிரா பெற்று உள்ளது.
HCL டெக் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, பிரான்ஸ் நாட்டின் "செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானர்" (நைட் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்) விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தாம் ஆற்றிய சிறப்பானப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் அவர்களுக்கு ரஷ்ய அதிபர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச ஆலோசனை அமைப்பான ICOMOS ஆனது (International Council on Monuments and Sites – நினைவுச் சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனத்துலக அவை) அசாமின் சாரெய்டியோ மாவட்டத்தில் உள்ள அஹோம் சகாப்தத்தினைச் சேர்ந்த 'மொய்டாம்ஸ்' இடத்தினை உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்துள்ளது.
ராகுல் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் நியமிக்கப் பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்கு மெக்சிகோவின் எலிசா டி அண்டா மட்ராஸோ நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு சாலைப் பாதுகாப்பிற்கான செயல் திட்டத்தை ஏற்ற நாட்டின் முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாற உள்ளது.
2030 ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் சாலை விபத்துகளை 50% அளவு குறைக்கும் நோக்கில் இந்தச் செயல் திட்டம் அமல்படுத்தப்படும்.