TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 12 , 2024 134 days 206 0
  • Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom’ மற்றும் 'Forts of Tamil Nadu: A Walk-Through' என்ற தலைப்பிலான இரண்டு விளக்கப் படப் புத்தகங்களை (காபி மேசை புத்தகம் ) தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.
  • 15வது வேளாண்மையில் தலைமைத்துவத்திற்கான விருதுகள் குழுவினால் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண்மைக்கான மாநில விருதினை மகாராஷ்டிரா பெற்று உள்ளது.
  • HCL டெக் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, பிரான்ஸ் நாட்டின் "செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானர்" (நைட் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்) விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தாம் ஆற்றிய சிறப்பானப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் அவர்களுக்கு ரஷ்ய அதிபர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச ஆலோசனை அமைப்பான ICOMOS ஆனது (International Council on Monuments and Sites – நினைவுச் சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனத்துலக அவை) அசாமின் சாரெய்டியோ மாவட்டத்தில் உள்ள அஹோம் சகாப்தத்தினைச் சேர்ந்த 'மொய்டாம்ஸ்' இடத்தினை உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்துள்ளது.
  • ராகுல் டிராவிட்டிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்கு மெக்சிகோவின் எலிசா டி அண்டா மட்ராஸோ நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • அடுத்த 10 ஆண்டுகளுக்கு சாலைப் பாதுகாப்பிற்கான செயல் திட்டத்தை ஏற்ற நாட்டின் முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாற உள்ளது.
    • 2030 ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் சாலை விபத்துகளை 50% அளவு குறைக்கும் நோக்கில் இந்தச் செயல் திட்டம் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்