காட்சி ஊடகங்கள் (கட்புலத் தொடர்பாடல்) மற்றும் திரைப்படங்களில் மாற்றுத் திறனாளிகள் குறித்த பழமைவாதக் கருத்துக்களைத் திணிப்பது போல் சித்தரித்தல் பாகுபாட்டை நிலை நிறுத்துவதாகவும், படைப்பாளிகள் அந்தக் குறைபாடுகளை கேலி செய்வது அல்லது கற்பனை ரீதியிலான பிரதிபலிப்பு செய்வதற்குப் பதிலாக அவர்கள் குறித்த துல்லியமான ஒரு பிரதிபலிப்பினை வழங்க வேண்டும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அஜர்பைஜான் இராணுவம் மற்றும் கஜகஸ்தான் ஆகியவை கஜகஸ்தான் நாட்டில் மேற் கொள்ளப்படும் "பிர்லெஸ்டிக்-2024" எனப்படும் நடவடிக்கை சார்ந்த ஒரு உத்தி சார் கட்டுப்பாட்டுப் படைப்பிரிவு வீரர்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'உலகின் மிகப்பெரிய இராமாயணக் கோவில்' கட்டும் பணி தொடங்கியது.
இது கம்போடியாவில் உள்ள 12 ஆம் நூற்றாண்டின் அங்கோர் வாட் கோவில் வளாகத்தை விட உயரமாக இருக்கும்.
இந்தியக் குடிமைப் பணி வரலாற்றில் முதன்முறையாக, ஐதராபாத்தைச் சேர்ந்த மூத்த இந்திய வருவாய்ப் பணி அதிகாரி (IRS) ஒருவர் தனது பெயரையும் பாலினத்தையும் மாற்றக் கோரிய முறையீட்டிற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவரது பெயரை M. அனுகதிர் சூர்யா என்றும், தனது பாலினத்தினைப் பெண்ணிலிருந்து ஆணாக மாற்றவும் அவர் கோரியிருந்தார்.