இந்திய அரசானது, பொது விமானப் போக்குவரத்து தொடர்பான இரண்டாவது ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டினை செப்டம்பர் மாதம் நடத்தவுள்ளது.
தென் கொரிய நாடானது முதன்முறையாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சி மாநாட்டினை பூசன் நகரில் நடத்த உள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆனது முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மின்சாரப் படகின் சோதனை நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதிஷ் சிங், 19 மணி நேரத்தில் மலேசியாவின் கினாபாலு மலையில் ஏறி மாபெரும் சாதனையினைப் படைத்துள்ளார்.
கிழக்கு இந்தியாவில் முதல் முறையாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஒரு பிரத்தியேக பல்கலைக் கழகத்தினை ராஞ்சியில் நிறுவ ஜார்க்கண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் (BIMSTEC) 2வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
ICICI புருடென்ஷியல் பரஸ்பர நிதியம் ஆனது, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ICICI புருடென்ஷியல் நிஃப்டி எண்ணெய் & எரிவாயு ETF எனப்படும் இந்தியாவின் முதல் வகை பரிவர்த்தனை வர்த்தக நிதியினை (ETF) அறிமுகப் படுத்தியுள்ளது.