TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2024 126 days 187 0
  • இந்தூரில் 24 மணி நேரத்திற்குள் ஏறக்குறைய 12 லட்சம் மரங்களை நட்டு மத்தியப் பிரதேச அரசு உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
  • நீதிபதி கோடீஸ்வர் சிங் மணிப்பூரைச் சேர்ந்த முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • 35வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் (IBO) போட்டியில் (2024) பங்கேற்ற இந்திய அணி ஒரு தங்கப் பதக்கத்தையும் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளது.
  • ஆசியாவின் முதல் சுகாதார ஆராய்ச்சி “மருத்துவத்திற்கு முந்தைய நிலைகள் சார்ந்த செயல்பாடுகளின் வலையமைப்பு மையமானது” ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் தொடங்கப்பட்டது.
  • உத்தரகாண்ட் மாநில வனத்துறையானது உத்தரகாண்டின் முதல் பறவைக் காட்சியகத்தினை டேராடூனில் நிறுவியுள்ளது.
  • விசாகப்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'கப்பற்படை விருது விழா-2024' என்ற நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படையின் சிறந்த கப்பலாக ஐஎன்எஸ் டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மால்டா நாட்டு அரசியல்வாதி ராபர்ட்டா மெட்சோலா 2027 ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்