சமீபத்தில் நீதிபதிகள் N. கோடீஸ்வர் சிங் மற்றும் R. மகாதேவன் ஆகியோரின் நியமனம் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது முழு வரம்பினை (34) எட்டியுள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்று புனைக் கதைப் புதினமான ‘The Prisoner of Bhopal’ என்ற தலைப்பிலான தனது இரண்டாவது புத்தகத்தினை டிம் வாக்கர் வெளியிட்டுள்ளார்.
எழுதுபொருள் விற்பனை நிறுவனமான கேம்லின்-இன் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் சமீபத்தில் காலமானார்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் வேளாண் இணைப்பினை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடகிழக்கு பிராந்திய வேளாண் பொருட்களுக்கான இணைய இணைப்பு (NERACE) இணைய தளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கப்பட்டது.
வணிக நிலக்கரித் தொகுதி இணைய முறையிலான ஏலத்தின் கீழ் ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள மச்சகட்டா (திருத்தியமைக்கப்பட்ட) நிலக்கரித் தொகுதிக்கான வெற்றிகரமான ஏலதாரராக NLCIL உருவெடுத்துள்ளது.
பொறுப்பு மிக்க செயற்கை நுண்ணறிவு (RAI) பற்றிய அதன் வெளியீட்டின் தொடரில், நிதி ஆயோக் அமைப்பானது, "அனைவருக்குமான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு: கட்டமைப்பினை ஏற்றுக் கொள்ளுதல் - முக அடையாள அங்கீகார தொழில் நுட்பத்தில் ஒரு பயன்பாட்டு அணுகுமுறை" என்ற தலைப்பிலான மூன்றாவது அறிக்கையினை வெளியிடுகிறது.