TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 2 , 2018 2148 days 645 0
  • தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு முறையையும் இடம் சார்ந்து முடிவெடுக்கும் ஆதரவு முறையையும் ஆரம்பித்துள்ளது. இது நகர குடியிருப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வெள்ள முன்னறிவிப்பையும் தங்கள் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்குவதற்கான வாய்ப்புடைய பகுதிகளையும் பற்றித் தகவல் கொடுக்கும்.
  • இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பினய் குமார் இந்திய அரசின் எஃகுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேரள மாநில அரசு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது மாநிலத்தை மீள்கட்டமைப்பதில் திட்ட ஆலோசனை பங்குதாரராக KPMG என்ற உலகில் மிகப்பெரிய நிபுணத்துவம் கொண்ட சேவை நிறுவனத்தை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
  • 2018-19ம் ஆண்டிற்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் புதிய தலைவராக பஞ்சாப் தேசிய வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுனில் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஒடிசா மாநில அரசு மலேரியாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை ஒழிப்பதற்காக ஒரு வலுவான திட்டப்பாதையையும் வகுப்பதற்காக ”மலேரியா ஒழிப்பு அறக்கட்டளை” (Malaria Elimination Trust) என்ற நிறுவனத்துடனும் அமெரிக்காவைச் சேர்ந்த “மலேரியா இனி இல்லை” (Malaria No More) என்ற நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்திய அஞ்சலக வங்கிச் சேவை நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக வோடபோன் M-Pesa நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் சுரேஷ் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 2017 முதல் இந்திய அஞ்சலக வங்கிச் சேவை நிறுவனத்தின் இடைக்கால மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த A.P. சிங் என்பவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய மற்றும் நேபாள பிரதமர் ஆகியோர் கூட்டாக இணைந்து 400 படுக்கைகள் கொண்ட நேபாள-பாரத மைத்ரி பசுபதி தர்மசாலை என்ற ஓய்வு இல்லத்தை துவக்கி வைத்தனர். இந்த ஓய்வு இல்லம் காத்மண்டுவில் இந்தியாவின் உதவியுடன் யாத்ரீகர்களுக்காக கட்டப்பட்டதாகும்.
  • மத்திய உள்துறை அமைச்சகம் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக 2021ம் ஆண்டில் சென்சஸ் அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
    • கடைசியாக ஜாதித் தகவல்களை 1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சேகரித்ததன் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மண்டல் குழுவின் பரிந்துரைகளின்படி 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு 26 வருடங்களுக்குப் பிறகு இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய ரிசர்வ் வங்கியானது அடுத்த அறிவிப்பு வரும்வரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ரானா கபூரை மறுநியமனம் செய்துள்ளது. ரானா காபூரின் பதவிக் காலமானது செப்டம்பர் 1 உடன் முடிவடையவிருந்தது.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவசார் தாவரங்களின் மன்றத்தின் 7-வது கூட்டமானது மத்திய ஆயுஷ் அமைச்சரின் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது (NMPB – National Medicinal Plant Board).
  • காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் தாம் எழுதிய “உண்மையின் நிழல்கள் : தடம்புரண்ட பயணம்” என்ற புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்.
  • வாஷிங்டன்C.யில் உள்ள பாராளுமன்ற நூலகத்தில் தனது கவிதைகளை பதிவு செய்வதற்காக முதலாவது இந்தியக் கவிஞராக K. அபே அழைக்கப்பட்டுள்ளார். கவிஞர் மற்றும் கவிதை என்ற தொடரை கவிஞர் கிரேஸ் கவாலியேரி நடத்தினார்.
  • பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக மாதவன் பொறுப்பேற்றார். இதற்குமுன் T. சுவர்ணா ராஜு அப்பொறுப்பு வகித்தார்.
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பொறுப்பேற்க உள்ளார். இவரது பெயர் மத்திய அரசாங்கத்திற்கு தற்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவால் பரிந்துரைக்கப்பட்டது.
  • செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரை முதலாவது சர்வதேச கோ கோ சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
  • மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையமானது சத்ரபதி சிவாஜி ‘மகாராஜ்’ சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்