TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 30 , 2024 116 days 157 0
  • பிரான்சு நாட்டு அரசானது தெற்காசியப் புகைப்படக் கலை மற்றும் இந்திய-பிரான்சு கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காக வேண்டி ரஹாப் அல்லானா ஆற்றியப் பணிக்காக, அவரை Officer of the Order of Arts and Letters எனும் விருது அளித்து கௌரவித்துள்ளது.
  • பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் ஒலிம்பிக் XXVI மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2030) நடத்தப்பட உள்ளன.
  • அமெரிக்காவின் உட்டா மாகாணத்தின் தலைநகரான சால்ட் லேக் சிட்டி நகரில் ஒலிம்பிக் XXVII மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2034) நடத்தப்பட உள்ளன.
  • சுவிட்சர்லாந்தின் லோகார்னோ திரைப்பட விருது விழாவில் ஷாருக்கானுக்கு மதிப்பு மிக்க பர்டோ அல்லா கேரியரா விருது வழங்கப்பட உள்ளது.
    • சமீபத்தில், பாரிஸின் கிரெவின் அருங்காட்சியகம் அவரின் உருவம் பொதித்தத் தங்க நாணயங்களை வெளியிட்டு கௌரவித்தது.
  • சர்வதேச நண்பர்கள் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 30 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
    • ஆனால், இந்தியா, வங்காளதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற சில நாடுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை தினத்தினை நட்பு தினமாக அனுசரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்