TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 31 , 2024 115 days 148 0
  • கன்னியாகுமரியைச் சேர்ந்த சந்தியா தேவிக்கு 2024ஆம் ஆண்டுக்கான சமூக நலத் துறையின் சிறந்த திருநங்கை விருதைத் தமிழக முதல்வர் வழங்கினார்.
    • கோவிட்-19, வரதட்சணை கொடுமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் 1000க்கும் மேற்பட்ட வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
  • நாட்டிலுள்ள 61 விமான நிலையங்களில் 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான வாடிக்கையாளர் சேவை கணக்கெடுப்பில் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.
    • அதைத் தொடர்ந்து காங்க்ரா விமான நிலையம் (இரண்டாவது), லே (மூன்றாவது), மதுரை (நான்காவது) இடத்தில் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு விருக்சரோபன் அபியான் நிகழ்ச்சியானது, "ஏக் பெட் மா கே நாம்" திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டதோடு இது நிலக்கரி மற்றும் லிக்னைட் கனிமங்கள் நிறைந்த 11 மாநிலங்களில் உள்ள 47 மாவட்டங்களில் 300 இடங்களில் நடைபெற்றது.
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத் துறைத் தலைவர் ராஜேந்திர சிங் ஆசியப் பேரிடர் தயார்நிலை மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி மையமானது, மும்பையில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்திய இணையவெளிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஆனது ஜூலை 01 ஆம் தேதி முதல் உள்துறை அமைச்சகத்துடன் ஒரு "இணைக்கப்பட்ட அலுவலகமாக" மாற்றப் பட்டுள்ளது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (IOC), ஒலிம்பிக் இணைய வழி ரீதியில் விளையாட்டுப் போட்டிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.
    • இதன் முதல் போட்டியானது 2025 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது, இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
    • கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களின் மீதான சட்ட விரோதமான வர்த்தகத்தினைத் தடுப்பதையும், கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பழங்காலப் பொருட்களை அவற்றின் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான செயல்முறையை எளிதாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்