1934 ஆம் ஆண்டு திறக்கப் பட்டதிலிருந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
மெட்டா நிறுவனமானது லாமா 3.1 எனப்படும் அதன் மிகப்பெரிய மற்றும் "சிறந்த இலவச மென்பொருள் மாதிரியினை" வெளியிட்டுள்ளது.
1955 ஆம் ஆண்டு பணி நியமனத் தொகுதியினைச் சேர்ந்த மூத்த ஆட்சிப் பணியாளர் P.N. வேதநாராயணன் சமீபத்தில் காலமானார்.
2024 ஆம் ஆண்டு பாரீசு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக்குழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையினை மனு பாக்கர் துவக்கி வைத்துள்ளார்.
ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் வாகனப் பந்தயத்தில் இந்தியாவின் குஷ் மைனி தனது முதல் ஃபார்முலா 2 ஸ்பிரிண்ட் (குறுகிய தூரத்திலான சீர்வேக கார் பந்தயம்) பந்தயத்தில் வெற்றிப் பெற்றதன் மூலம் புதிய சாதனையினை எட்டியுள்ளார்.
இந்திய மசாலாப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் (IISR) ஆனது தோட்டக்கலை அறிவியல் துறையில் அதன் முன்னோடிமிக்கப் பணிக்காக சிறந்தத் தொழில்நுட்ப விருதைப் பெற்றுள்ளது.
OpenAI நிறுவனமானது, அதன் மிகவும் செலவு குறைந்த மொழி மாதிரியான GPT-4o மினி எனப்படும் சிறிய மொழி மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
OpenAI நிறுவனமானது அதன் பயனர்களுக்கு "தெளிவான மற்றும் பொருத்தமான ஆதாரங்களுடன் விரைவான மற்றும் சரியான நேரத்தில் பதில்களை" வழங்கச் செய்வதற்காக, SearchGPT எனப்படும் அதன் தேடுபொறியின் ஒரு முன்மாதிரியை அறிமுகப் படுத்தியுள்ளது.
இலங்கை அணியானது, இந்திய அணியினை வீழ்த்தி தனது முதல் மகளிர் ஆசியக் கிரிக்கெட் கோப்பையை வென்றுள்ளது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் வங்காளதேச அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியினை வீழ்த்தியது.