சிறந்த தமிழ் கல்வெட்டியல் நிபுணரும் வரலாற்றாசிரியருமான V.வேதாச்சலம் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான V.வெங்கையா கல்வெட்டியல் விருதானது, வழங்கப் பட்டுள்ளது.
தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தில் (PTR) அதன் காடுகளுக்குள் நிகழ்நேர கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகள் மற்றும் Wi-Fi சேவை இணைப்பிற்கான மின்சார ஆற்றலை உருவாக்குவதற்காக காற்றாலை விசையாழி நிறுவப்பட்டுள்ளது.
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர்கள் இரண்டு தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும், 2024 ஆம் ஆண்டு சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
ஆதித்யா பிர்லா குழுமம் ஆனது, இந்திரியா எனப்படும் அதன் அதன் புதிய தயாரிப்பு நிறுவனத்தினை அறிமுகப்படுத்தி இந்திய நகை விற்பனைச் சந்தையில் நுழைந்து உள்ளது.
ஒன்றியப் பணியாளர் ஆணையத்தின் (UPSC) புதிய தலைவராக முன்னாள் மத்திய சுகாதாரச் செயலாளரும், 1983 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச பணித் தொகுதியினைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஜியா ராய், ஆங்கிலக் கால்வாயை 17 மணி நேரம் 25 நிமிடங்களில் 34 கி.மீ நீந்தி, மிக இளம் வயது மற்றும் அதிவேக மாற்றுத் திறனாளி நீச்சல் வீராங்கனை என்றப் பெருமையினைப் பெற்று உள்ளார்.
BBVA மற்றும் சர்வதேச நிதியியல் கழகம் ஆகியவை 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலக்காகக் கொண்ட உலகின் முதல் பல்லுயிர்ப் பெருக்கப் பத்திரத்தின் முதல் தவணையாக 15 மில்லியன் அமெரிக்க டாலர் பத்திரங்களை வெளியிட்டுள்ளன.