இந்திய நாடானது, சுமார் 30 நாடுகளின் பங்கேற்புடன் ‘தரங் சக்தி 2024’ எனப்படும் தனது முதல் பன்னாட்டு விமானப் பயிற்சியினை தமிழ்நாட்டில் உள்ள சூலூர் என்னும் இடத்தில் நடத்த உள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், மருத்துவப் பணி தலைமை இயக்குநர் (இராணுவ) பதவியை ஏற்றதையடுத்து, இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் விநியோக சங்கிலிச் சபையின் துணைத் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நத்வானி எழுதிய கிர் மற்றும் ஆசிய சிங்கங்கள் பற்றிய “Call of the Gir” எனப்படும் விளக்கப் படப் புத்தகத்தினைப் பிரதமர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
காஷ்மீர் நகரம் ஆனது, உலக கைவினைப் பொருட்கள் நகரம் என்ற சான்றிதழை உலக கைவினைப் பொருட்கள் சபை என்ற அமைப்பிடம் இருந்து பெற்றுள்ளது.
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தின் (GTMC) செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கான நிதி விதிமுறைகளைக் குறிப்பிட்டுக் காட்டும் நன்கொடையாளர் ஒப்பந்தத்தில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு கையெழுத்திட்டுள்ளன.
KIIT (ஓடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழிற்சாலை தொழில்நுட்பக் கல்லூரி) நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகச் சபையானது (UN ECOSOC) மதிப்பு மிக்க சிறப்பு ஆலோசக நிறுவனம் என்ற அந்தஸ்தினை வழங்கியுள்ளது.
உலகப் பொருளாதாரங்களில் நிதியியல் தொழில்நுட்பத்தின் மிகவும் மாறுதல் மிக்க தாக்கத்தினை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று உலக நிதி சார் தொழில்நுட்பத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.