உச்ச நீதிமன்றம் ஆனது தனது 75வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சுமுகமாக தீர்த்து வைப்பதற்காக ஒரு வார கால சிறப்பு லோக் அதாலத் இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான வாழ்க்கை முறைகள் தொடர்பான நடத்தை மாற்றங்களைத் தூண்டும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான கருத்தாக்கங்களைக் கோருவதற்காக Ideas4LiFE என்ற எனப்படும் முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டு பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டு அறிக்கையின்படி, 119 நாடுகளில் இந்தியா 39வது இடத்தில் உள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் சமீபத்தில் காலமானார்.
தென்னிந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் ஆனது பெங்களூரு நகரில் திறக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று (ஆகஸ்ட் 04), உலகம் முழுவதும் உள்ள மக்களை அவர்களது நண்பர்களுடன் இணைக்க ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் தேசிய நட்பு தினம் கொண்டாடப் படுகிறது.