TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2018 2147 days 612 0
  • அனைத்து மத அமைப்புகளும் மற்றும் வேறு எந்த குழுவினரைச் சேர்ந்த மக்களும், ஃபத்வா வழங்குவதில் இருந்து தடைசெய்யப்படுவதாக உத்தரக்கண்ட் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    • ஃபத்வா என்பது, ஒரு குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக மதச் சட்ட (முஃப்தி) வல்லுனரால் வழங்கப்படும் ஒரு இசுலாமியத் தீர்ப்பாகும்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவிற்கு, குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் திட்டத்திற்காக ரூ.929.89 கோடியை நிதிஉதவியாக அளிப்பதற்கு உலக வங்கியானது கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது.
  • திருச்சி மாநகராட்சியானது QR முறை பொருத்தப்பட்ட வீடுதோறும் கழிவு சேகரிப்பு கண்காணிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது.
  • 2017-2018ம் ஆண்டு காலத்தில் இந்தியாவிற்கு வந்த மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மொரீசியஸ் முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து அந்த நிதியாண்டில் சிங்கப்பூர் 37.36 டாலர் பில்லியன் தொகையோடு இரண்டாமிடத்தில் உள்ளது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான தருண் அகர்வாலை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவிற்கு தலைவராக நியமித்துள்ளது.
  • பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆறு வடக்கு மாநிலங்களில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிட விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஆறு மாநிலங்களாவன - உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, தில்லி மற்றும் ராஜஸ்தான். இதனோடு ஒன்றிய ஆட்சிப் பகுதியான சண்டிகரும் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்