சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் நலனுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த லக்ஷ்மண ஐயரின் உருவச்சிலையை தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை பெண் நீதிபதியாக நீதிபதி தஹிரா சஃப்தார் பதவியேற்றார்.
முன்னதாக, 1982-ல் அவர் பலூச்சிஸ்தான் நீதிமன்றத்தின் முதல் பெண் குடிமையியல் நீதிபதியாக ஆனார்.
இராஜஸ்தான் அரசானது, 1947க்கு பிறகு வீரமரணம் அடைந்து, அவருடைய நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் வேலை வழங்காமல் இருக்கும் பட்சத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் ஒருவருக்காவது வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவால் எழுதப்பட்ட “மூவிங் ஆன்…. மூவிங் ஃபார்வார்டு : ஏ இயர் இன் ஆஃபிஸ்” (முன்னேற்றத்தை நோக்கி... மேலும் முன்னேற்றம் - பணியில் ஒரு ஆண்டு) என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
துறைமுகப் பகுதியின் உள்ளே மிகப்பெரிய கச்சா எண்ணெய் தாங்கியை (VLCC) கையாளக்கூடிய முதல் பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் (ChPT – Chennai Port Trust) ஆனது. இன்றளவு வரை துறைமுகத்தால் கையாளப்படும் பெரிய கப்பலாக VLCC நியூ டைமண்டு என்ற கப்பல் உள்ளது.
பொதுமக்களுக்கான போக்குவரத்திற்காக ஒரு நாடு ஒரு அட்டை (One nation One card) என்கிற திட்டத்தை இந்தியா விரைவில் வெளியிடும் என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அறிவித்தார். இந்தத் திட்டமானது பல்வேறு வகையான போக்குவரத்து முறைகளுக்கிடையே தடையற்ற இணைப்பைக் கொண்டுவரும்.