TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 11 , 2024 104 days 141 0
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான 100 மூத்த தமிழறிஞர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான ஆணைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.
    • தமிழக அறிஞர்கள் மாதம் 3,500 ரூபாய் உதவித் தொகையும், மருத்துவ உதவித் தொகையாக 500 ரூபாயும் பெறுவார்கள்.
  • இந்திய நாட்டு அரசானது முதன்முறையாக யுனெஸ்கோவின் மிக மதிப்புமிக்க உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தினைப் புது டெல்லியில் நடத்தியது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதிக்கு முன் வாங்கிய அசையாச் சொத்துகளுக்கு அசல் மதிப்பில் ஈடு செய்தல் பலன் மீண்டும் வழங்கப்படும் என்று மத்திய அரசு முன் மொழிந்துள்ளது.
  • மத்திய வெளிவிவகாரங்கள் அமைச்சர் புது டெல்லியில் 2வது BIMSTEC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
  • இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்ட மறுநாள் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.
  • ஜப்பானிய அறிவியலாளர்கள் உயிருள்ள தோல் திசுக்களை ரோபோ (எந்திர மனித) முகங்களுடன் பொருத்தி அவற்றை "புன்னகைக்கச் செய்யும்" ஒரு வழியை உருவாக்கி உள்ளனர்.
  • பசுமை சார் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உறுப்பினர் நாடுகள் ஆனது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கை அடைய உதவுவதற்கும் 29வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP29) பருவநிலை நிதி வழங்கீட்டு நடவடிக்கை நிதியை அஜர்பைஜான் அறிவித்து உள்ளது.
  • ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து, வங்காளதேசத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக் கால அரசாங்கம் நிறுவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்