மாநிலங்களவை உறுப்பினர் பீம் சிங் 75 Great Revolutionaries of India என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
90 மெகாவாட் ஆற்றல் உற்பத்தி திறன் கொண்ட மத்திய மற்றும் வட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னாற்றல் உற்பத்தி நிலையமானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் எனுமிடத்தில் தொடங்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் 77வது லோகார்னோ திரைப்பட விழாவில் பர்டோ அல்லா கேரியரா/ Career Leopard என்றும் அழைக்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில அரசானது, அந்த மாநிலத்தில் புதிய புலிகள் வளங்காப்பகத்தினை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து, காடுகள் நிறைந்துள்ள அம்மாநிலத்தின் நான்காவது புலிகள் வளங்காப்பகமாக இது அமைய உள்ளது.
தற்போது சத்தீஸ்கரில் மூன்று புலிகள் வளங்காப்பகங்கள், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி, கரியாபந்தில் உள்ள உடந்தி-சிதாநதி மற்றும் முங்கேலியில் உள்ள அச்சனக்மர் வளங்காப்பகம் ஆகிய உள்ளன.