தமிழக அரசானது கர்ப்பிணி பெண்களைக் கண்காணிப்பதற்காக புதிதாக 102 எனும் புதிய உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் முதன்முறையாக உலகளாவிய பிரவாசி மகளிர் கபடி லீக் போட்டி நடைபெற உள்ளது.
இந்திய விமானப்படை மற்றும் மலேசிய அரசின் விமானப்படை ஆகிய இரண்டும் மலேசியாவில் நடைபெற்ற 'உதார சக்தி 2024' எனப்படும் பயிற்சியில் பங்கேற்றன.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, 'லப்படா லேடீஸ்' எனப்படும் பாலினச் சமத்துவ அடிப்படையிலான இந்தி மொழித் திரைப்படமானது, அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பதிவுத்துறை உறுப்பினர்களுக்காக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் புதிய நீர் சார் தொழில் நுட்ப மையத்தினை நிறுவுவதற்கு இந்தியா மற்றும் இஸ்ரேல் அரசுகள் கைகோர்த்து உள்ளன.
மகாபலிபுரம் திருவிடந்தை கடற்கரையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 பேர் உள்ளிட்ட பட்டம் விடும் வீரர்களின் பங்கேற்புடன் 3வது தமிழ்நாடு சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.
சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம் ஆனது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக என்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் சர்வதேச தினமாகும்.