டாபர் இந்தியா நிறுவனம் ஆனது, தமிழ்நாட்டில் திண்டிவனத்தில் உள்ள SIPCOT உணவுப் பூங்காவில் தென்னிந்தியாவின் தனது முதலாவது உற்பத்திப் பிரிவினை அமைப்பதற்கு 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் பல்வேறு ஆபத்துகளுக்கான முன் எச்சரிக்கை மையமாக மேம்பட்டுத்தப்பட்ட மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்தினை (SEOC) தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி அவர்களின் அனைத்து இலக்கியப் படைப்புகளையும் எழுத்துரிமைத் தொகை எதுவுமின்றி நாட்டு உடைமையாக்க தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவரது இலக்கியப் படைப்புகளில் 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 200க்கும் மேற்பட்ட கவிதைகள் போன்றவை அடங்கும்.
வேலூரின் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை இணைந்து கை அசைவு சிகிச்சைக்கான ஒரு புதுமையான, எளிதில் சுமந்து செல்லக் கூடிய மற்றும் மலிவு விலையிலான எந்திர இயக்கத் தீர்வினை உருவாக்கியுள்ளன என்ற நிலையில் இது பக்கவாதத்திலிருந்து மீளச் செய்வதற்கான உடல் மற்றும் தொழில்சார் சிகிச்சையைச் சரியான நேரத்தில் பெறக் கூடியதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்கு 2.07 மில்லியன் பீப்பாய்கள் என்ற வீதத்துடன், சீனாவை விஞ்சி உலகிலேயே அதிகளவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
கர்நாடகா, இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான (5,765) பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களைக் கொண்டுள்ளது என்ற நிலைமையில் இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் இடம் பெற்று உள்ளன.
தீவிரவாதத்தினால் மிகவும் பாதிக்கப் பட்டவர்களுக்கான நினைவு கூறல் மற்றும் கௌரவிப்பதற்கான சர்வதேச தினம் ஆனது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.
மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான பல்வேறு வன்முறைச் செயல்களால் பாதிக்கப் பட்டவர்களை நன்கு நினைவு கூரும் சர்வதேச தினம் ஆனது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.