தருண் சுக் எழுதிய “Modi’s Governance Triumph: Reshaping India’s Path to Prosperity” என்ற தலைப்பிலான புத்தகம் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவுடன் சேர்த்து நவம்பர் மாதத்தில் முதலாவது உலக ஒலி கட்புல மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டினை இந்தியா நடத்தவுள்ளது.
இந்தியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுள்ளதன் மூலம் பாதுகாப்பு, வர்த்தகம், மருந்துகள், பசுமை ஆற்றல் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளன.
ஐதராபாத்தில் உள்ள இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (RGIA) ஆனது, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா பயண விருதுகளில் சிறந்த விமான நிலையமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆனது, 100 முன்னணி மேகக் கணிம நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனமாக Razorpay ஆனது.
இந்த நிறுவனம் ஆனது தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.