பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, Su-30 MK-I விமானத்தில் இருந்து ஏவக்கூடிய GAURAV எனப்படும் தொலை தூர வரம்புடைய தட்டையான பாதையில் காற்றை கிழித்துச் செல்லக்கூடிய குண்டு (LRGB) மீதான முதல் ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
குஜராத்தில் உள்ள காக்ராபார் அணுமின் நிலையத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் உலை அதன் முழு செயல் திறனில் இயங்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது, கடுமையான ஒவ்வாமை சார்ந்த எதிர்விளைவுகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக நெஃபி எனப்படும் நாசி வழி தெளிப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற நிலையில் இது எபிபென் போன்ற ஊசி வழி மருந்துகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஊசி வழி சாராத மருந்தாகும்.