சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில், மதுரை முதல் பெங்களூரு கண்டோன்ட் மற்றும் மீரட் நகரிலிருந்து லக்னோ வரை என மூன்று புதிய வந்தே பாரத் விரைவு ரயிலைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
அமேசான் நிறுவனமானது ரூஃபஸ் எனப்படும் தனது மிக ஆக்கப் பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளினை இந்திய வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் உள்ள சீமென்ஸ் ஹெல்த்னியர்ஸ் என்ற ஒரு பெரு நிறுவனம் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குரங்குக் காய்ச்சலுக்கான RT-PCR பரிசோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) மற்றும் பானக்கியா பயோடெக் லிமிடெட் ஆகியவை முதல் முறையாக DengiAll எனப்படுகின்ற டெங்கு தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை இந்தியாவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு (ICC) ஆனது டெல்லியில் படைப்பாக்கம் மிக்க பொருளாதாரத்திற்கான அகில இந்திய முன்னெடுப்பினை (AIICE) மிகவும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா அறக்கட்டளையானது, அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 8வது தர்ம தம்மா மாநாட்டினை ஏற்பாடு செய்து உள்ளது.
இந்திய விமானப்படை (IAF) ஆனது முதலாவது எகிப்து சர்வதேச விமானக் சாகச காட்சி நிகழ்வில் (2024) பங்கேற்பதற்காக தனது சாரங் ஹெலிகாப்டர் சாகச காட்சிக் குழுவினை அனுப்பியுள்ளது.
காந்திநகரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, நர்மதா நதிப் படுகையின் நிலை மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் திட்டத்தை (CAMP) மேற் கொள்வதற்காக நர்மதா நதி படுகை மேலாண்மை மையத்தினை (cNARMADA) நிறுவியுள்ளது.
சௌமியா சுவாமிநாதன் அவர்கள், ஆர்வலர் கல்பனா சங்கர் எழுதிய ‘The Scientist Entrepreneur: Empowering Millions of Women’ என்ற ஒரு சுயசரிதை புத்தகத்தினை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ரோபார் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய தேக்பீர் சிங், ஆப்பிரிக்காவின் 5895 மீ உயரமுள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்த முதல் இளம் ஆசிய நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மாலத்தீவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் மருஹபா கோப்பைப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
1986 ஆம் ஆண்டு பணி நியமன தொகுதியினைச் சேர்ந்த இரயில்வே நிர்வாக இயந்திரப் பொறியாளரான சதீஷ் குமார், இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் (CEO) நியமிக்கப் பட்டு உள்ளார்.
இரயில்வே நிர்வாகத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் அதன் தலைமைப் பொறுப்பேற்ற முதல் தலித் நபர் இவர் ஆவார்.