TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2024 39 days 86 0
  • மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியானது (எம்எம்சி) “மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ICMR மையம் (CAR): கிராமப்புற சுகாதார மாற்றம் (RAHAT)” எனும் திட்டத்திற்கான ஆறு நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் ஜியோவானது முழு செயற்கை நுண்ணறிவு (AI) வாழ்க்கைச் சுழற்சியில் ‘JioBrain’ எனப்படும் கருவிகள் மற்றும் பயன்பாடுகளின் ஒரு தொகுப்பை உருவாக்கி வருகிறது.
  • பாகிஸ்தானைச் சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ் ஏ. பெரேரா என்ற கிறிஸ்தவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் கோவாவில் இந்தியக் குடியுரிமையைப் பெற்ற முதல் நபர் ஆவார்.
  • இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதில் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை அம்மாநிலச் சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
  • ஹரியானா சதுரங்கச் சங்கம் நடத்திய 61வது இந்தியச் சதுரங்கச் சாம்பியன்ஷிப் போட்டியின் பட்டத்தை ஆந்திரப் பிரதேச கிராண்ட் மாஸ்டர் கார்த்திக் வெங்கடராமன் வென்றார்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் எண்ணிம ஊடகக் கொள்கை 2024 ஆனது, ஊடகத்தின் வழியே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களுக்கு கொண்டு சேர்க்க தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.8 லட்சம் வரை செலுத்த அனுமதிக்கிறது.
  • ஷன்ஷான் சூறாவளியானது சமீபத்தில் ஜப்பானைப் பலத்த மழையுடன் தாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்