மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியானது (எம்எம்சி) “மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ICMR மையம் (CAR): கிராமப்புற சுகாதார மாற்றம் (RAHAT)” எனும் திட்டத்திற்கான ஆறு நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவானது முழு செயற்கை நுண்ணறிவு (AI) வாழ்க்கைச் சுழற்சியில் ‘JioBrain’ எனப்படும் கருவிகள் மற்றும் பயன்பாடுகளின் ஒரு தொகுப்பை உருவாக்கி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ் ஏ. பெரேரா என்ற கிறிஸ்தவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் கோவாவில் இந்தியக் குடியுரிமையைப் பெற்ற முதல் நபர் ஆவார்.
இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதில் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை அம்மாநிலச் சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
ஹரியானா சதுரங்கச் சங்கம் நடத்திய 61வது இந்தியச் சதுரங்கச் சாம்பியன்ஷிப் போட்டியின் பட்டத்தை ஆந்திரப் பிரதேச கிராண்ட் மாஸ்டர் கார்த்திக் வெங்கடராமன் வென்றார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரப் பிரதேசத்தின் எண்ணிம ஊடகக் கொள்கை 2024 ஆனது, ஊடகத்தின் வழியே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களுக்கு கொண்டு சேர்க்க தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.8 லட்சம் வரை செலுத்த அனுமதிக்கிறது.
ஷன்ஷான் சூறாவளியானது சமீபத்தில் ஜப்பானைப் பலத்த மழையுடன் தாக்கியது.