மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வாத்வான் துறைமுகத்திற்கு இந்திய பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சமீபத்தில் கோவாவில் இந்தியக் கடலோரக் காவல்படையினால் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ இயக்கப் பட்டது.
இரண்டாவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை (ISMR) மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது.
அவசரநிலை மேலாண்மைத் துறையில்ஒத்துழைப்புக்கான ரஷ்ய-இந்தியக் கூட்டு ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.
பெர்க்சையர் ஹாத்வே என்ற நிறுவனம் $1 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டியுள்ள ஒரு நிறுவனமாகவும் இந்த மைல்கல்லை எட்டிய முதல் தொழில்நுட்பம் சாராத அமெரிக்க நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
கூகுள் டீப் மைண்டின் இந்தியப் பிரிவு, மோர்னி (இந்தியாவுக்கான பல மாதிரிகளின் பிரதிநிதித்துவம்) என்ற இந்திய மொழி செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை உருவாக்க உள்ளது.
இது 125 இந்திய மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளை உள்ளடக்கிய மற்றும் அதற்குச் சமமான இந்திய செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.