தமிழ்நாடு அரசானது, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
நோக்கியா நிறுவனமானது சென்னையில் உள்ள அதன் நீடித்த நிலையான வலை அமைப்புகளின் (கம்பி வடம் சார்ந்த இணைப்புகள்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளை 450 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்துவதற்காகவும், 100 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, நேபாளத்தின் முதல் ‘ஆரோக்கியமான நகரம்’ மற்றும் ஆசியாவின் இரண்டாவது ஆரோக்கியமான நகரமாக அங்கு கவ்ரேபாலஞ்சோக் என்ற மாவட்டத்தின் துலிகேல் நகராட்சியை அறிவித்துள்ளது.
ரெயில்டெல் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel) என்ற நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகளுக்கான (EMS) உலகளாவிய அங்கீகாரத்தின் தர நிலையான ISO 14001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆனது, ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான தகவல் மற்றும் திறன்களை வழங்கி, அவர்களை வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்கான "ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான அதிகாரமளிப்பு பயிற்சி" (RESET) என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது.
வானளாவிய கட்டமைப்புகள் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 03 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
இது நவீன வானளாவிய கட்டமைப்புகளை வரையறுக்கும் கட்டிடக்கலை மற்றும் பொறியியலின் கண்கவர் சாதனைகளைக் கொண்டாடுகிறது.