TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 6 , 2024 33 days 93 0
  • பல்வேறு புகைப்படங்களின் மூலம் தரையிறங்கும் தளங்களின் புவியியல் இருப்பிடத்தைத் துல்லியமாக அடையாளம் காணும் வகையிலான சிறிய ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான வான்வழி அடிப்படையிலான தகவல் வழங்கீட்டுத் தானியங்கு தரையிறங்கும் அமைப்புகளுக்கான காப்புரிமையை அண்ணா பல்கலைக் கழகம் பெற்றுள்ளது.
  • அமெரிக்காவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ஓஹ்மியம் ஆனது, பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்காகவும்  மின்பகுப்பான்களைத் தயாரிக்கச் செய்வதற்காகவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி அலகினை நிறுவ உள்ளது.
  • நிதி அமைச்சகம் ஆனது, SJVN, Solar Energy, தேசிய நீர் மின்னாற்றல் உற்பத்திக் கழகம் மற்றும் ரெயில்டெல் ஆகிய 4 புதிய நிறுவனங்களை இந்தியாவின் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், புகழ்பெற்ற சட்ட அறிஞருமான A.G.நூராணி சமீபத்தில் காலமானார்.
  • இந்திய உலகளாவிய நிதியம் (WWF) ஆனது, கழுகுகளின் எண்ணிக்கையினை கணக்கிடல் மற்றும் மிகவும் அருகிய நிலையில் உள்ள இந்தப் பறவை இனங்கள் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றினை உள்ளடக்கிய ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • அமெரிக்க-இந்திய உத்தி சார் கூட்டாண்மை மன்றம் ஆனது, ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் மூன்றாவது இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு மேம்பாட்டு சூழல் அமைப்பின் (INDUS-X) உச்சி மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கிச் சுடுதல் SH1 போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • ப்ரீத்தி பால் மகளிருக்கான 200 மீட்டர் T35 வகை தடகளப் போட்டியில் வெண்கலம் மற்றும் 100 மீட்டர் T35 வகை தடகளப் போட்டியில் வெண்கலம் வென்றதையடுத்து, தடகளப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக  நடைபெறுவதற்கு ஆற்றிய அளப்பரிய ஆதரவினை அங்கீகரிப்பதற்காக பிரான்சு நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவர்களுக்கு ஒலிம்பிக் ஆர்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்