தனியார் வங்கிகளின் செயல்திறனை அளவிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டை ஆசியா இன்டக்ஸ் என்ற தனியார் நிறுவனமானது (இது எஸ் & பி டவ் ஜோன்ஸ் மற்றும் மும்பை பங்குச்சந்தை நிறுவனங்களுக்கிடையேயான கூட்டு நிறுவனமாகும்) அறிமுகப்படுத்தியுள்ளது.
‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான பரிட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்தை ஆளுநர் பன்வரிலால் புரோகித் வெளியிட்டார். இந்தப் புத்தகமானது, நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு தருணங்களில் பிரதமர் நரேந்திர மோடியால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைச் சொற்பொழிவின் தொகுப்புகள் ஆகும்.
நார்வே நிறுவனமான ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ் (Offshore Sensing AS) என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ‘SB Met’ என்ற படகானது, அட்லாண்டிக் பகுதியை கடந்த முதல் ஆளில்லா படகாக ஆனது.
இயந்திரத்தால் இயக்கப்படுகின்ற இந்த ஆளில்லா படகானது, கனடாவின் நியூஃபவுண்ட் லேண்டிலிருந்து அயர்லாந்து வரை இரண்டரை மாத பயணத்தின் மூலம் 1,800 மைல்களை (3000 கிமீ) கடந்தது.
சிசௌகா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து விண்வெளி விசைத்தூக்கியின் சிற்றுருவப் பதிப்பை உருவாக்கி உள்ளனர்.
குழந்தைகள் வன்புணர்வு தொடர்பான தகவல்கள் ஆன்லைனில் பரவுவதைத் தடுப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை கூகுள் உருவாக்கியுள்ளது.