மத்திய கல்வித் துறை அமைச்சகம் ஆனது, புது டெல்லியில் “Spectrum of Literacy” என்ற தலைப்பிலான ஒரு சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் முதல் சிலிக்கான் கார்பைடு உற்பத்தி மையம் ஆனது ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் உள்ள இன்ஃபோ வேலி எனுமிடத்தில் உள்ள EMC பூங்காவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தியா, மாலத்தீவு, மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகியவை கொழும்பு நகரில் கொழும்பு பாதுகாப்பு மையத்தின் (CSC) செயலகத்தினை அமைப்பதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தி எகனாமிக் டைம்ஸ் இதழின் உலகத் தலைவர்கள் மன்றம் (WLF) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
தேசிய ஒற்றைச் சுகாதார இயக்கத்தின் கீழ், பெருந்தொற்றுக்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக இராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் "விஷானு யுத் அபியாஸ்" (வைரஸ் பெருந்தொற்று நடவடிக்கை பயிற்சி) என்ற ஒரு விரிவான தேசிய மாதிரிப் பயிற்சி நடத்தப்பட்டது.
இருதரப்பு உறவுகள் சார்ந்த பயணமாக புருனே சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெற்றுள்ளார்.
சனந்த் என்னுமிடத்தில் ஒரு நாளைக்கு 6.3 மில்லியன் சில்லுகள் என்ற வீதத்தில் குறை கடத்திகள் உற்பத்தி செய்யும் அலகுகளை நிறுவுவதற்கான கெய்ன்ஸ் நிறுவனத்தின் முன்மொழிதலுக்கு குஜராத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு மாநில சட்டச் சேவைகள் ஆணையம் ஆனது, கொத்தடிமைத் தொழிலாளர் மற்றும் மனிதக் கடத்தல் நிகழ்வுகளில் உயிர் பிழைத்தவர்களை மீட்கவும், அது குறித்து வழக்குத் தொடரவும், அவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கவும் வேண்டி, நெருக்கடிகளுக்கான ஒற்றைத் தீர்வு வழங்கீட்டு குழுக்களின் (OSCT) மகத்தானப் பணிக்காக UNICEF விருதைப் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசானது வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் பிரதானக் கட்டிடத்தில் முப்பரிமாண வேத அருங்காட்சியகம் என்பதிதினை அமைக்க உள்ளது.
டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் அமைக்கப்பட்ட முதல் முழு அளவிலான இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகமாக விளங்க உள்ள தனது அபுதாபி வளாகத்தைச் சமீபத்தில் தொடங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில், உலகின் முதல் திருவள்ளுவர் மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்காக இந்த நகரில் இந்திய முதலீட்டு அலுவலகம் நிறுவப்படும்.