TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 12 , 2024 21 days 73 0
  • 2030 ஆம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருகிறது என்பதோடு, இது 2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நாட்டின் இலட்சியமிகு இலக்கிற்கு முன்னோடியாகும்.
  • ‘மும்பை சமாச்சார்- 200 நாட் அவுட்’ எனும் ஆசியாவின் பழமையான செய்தித்தாளின் முக்கியத்துவம் வாய்ந்த 200 ஆண்டு காலப் பயணத்தைக் குறிக்கும் வகையிலான ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில், தலைநகர் பெய்ஜிங் உட்பட ஒன்பது பிராந்தியங்களில் முழுவதுமாக வெளிநாட்டுக்குச் சொந்தமான தனியார் மருத்துவ மனைகளை நிறுவ சீனா விரைவில் அனுமதிக்க உள்ளது.
  • அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (CSIRO) இந்தியா ஆஸ்திரேலியா விரைவு புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவன விரிவாக்கம் (RISE) மேம்பாட்டுத் திட்டத்தின் பருவநிலை சார்ந்த திறன்மிகு வேளாண் தொழில்நுட்பக் கூட்டமைப்பிற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளன.
  • ஐக்கிய அரபு அமீரகமானது, அரபு நாடுகளின் முதல் அணுமின் நிலையமான பராக்கா அணுசக்தி ஆலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • மத்தியத் தரைக் கடல் பகுதியில் நடைபெற்ற ‘வருணா’ எனப்படும் இந்தியா – பிரான்சு இடையிலான இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் P8i என்ற போசிடான் விமானம் பங்கேற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்