TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 13 , 2024 19 days 55 0
  • ஐக்கியப் பேரரசு மற்றும் இந்தியா தங்களது நிதி மற்றும் தொழில்முறை சேவைக் கூட்டுறவினை வலுப்படுத்துவதற்காக ஐக்கியப் பேரரசு-இந்தியா உள்கட்டமைப்பு நிதி இணைப்பு (UKIIFB) முன்னெடுப்பினை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
  • HDFC வங்கியானது குறிப்பாக இணைய தளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேரப் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட GIGA எனப்படும் புதிய நிதித் தொகுப்பினை வெளியிட்டது.
  • இந்தியாவில் முதன்முறையாக, ஸ்டார் சுகாதார மற்றும் அது சார்ந்தக் காப்பீட்டு நிறுவனமானது இந்தியாவில் பார்வைத் திறனற்ற நபர்களை ஊக்குவிப்பதற்காக பிரெய்லி காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முதல் கூட்டுத் தளபதிகள் மாநாடு (JCC) ஆனது லக்னோவில் 'சஷக்த் மற்றும் சுரக்சித் பாரத்: ஆயுதப் படைகளை மாற்றியமைத்தல்' என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான முதன்மை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை (CSAR) மாநாடு ஆனது பாரிஸ் நகரில் யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
  • இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) ஆனது, தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற 20வது ஆசிய கடலோரக் காவல்படைகளுக்கான முகமைகளின் (HACGAM) தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றது.
  • ஜென்சோல் இன்ஜினியரிங் என்ற ஒரு நிறுவனமானது, இந்தியாவின் முதல் உயிரி எரிபொருளிலிருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டத்தின் பொறியியல், கொள் முதல் மற்றும் கட்டமைப்பு (EPC) பணிகளுக்காக மிகக் குறைந்த மதிப்பீட்டினை முன் வைத்த ஏலதாரராக உருவெடுத்துள்ளது.
    • இந்த மையமானது தினசரி சுமார் 25 டன் உயிரிக்  கழிவுகளைச் செயல்முறைக்கு உள்ளாக்கி, 18 மாதங்களில் மேம்பட்ட வாயுமயமாக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1 டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்