TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 14 , 2024 17 days 58 0
  • ஜபில் இங்க். மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் ஆகியவை தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் துறை மையங்களை நிறுவுவதற்கான திட்டங்களில் 2,666 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன.
  • தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது, அதன் மீண்டும் மஞ்சப்பைப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் படும் நெகிழிப் பைகளுக்குப் பதிலாக புதுமையான மற்றும் விலை குறைந்த துணிப் பைகளை உருவாக்கும் நோக்கில் ‘பேக்-அத்தான்’ சவாலை நடத்தி வருகிறது.
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனர் T.வெள்ளையன் சமீபத்தில் காலமானார்.
  • இரவீந்திரநாத் தாகூரின் கோரா என்ற புதினத்தினை தமிழில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல ஆங்கிலப் பேராசிரியர் K.செல்லப்பன் சமீபத்தில் காலமானார்.
  • பாராளுமன்றத்தின் அலுவல் மொழிக் குழுவின் தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மூத்த விளையாட்டுத் துறை நிர்வாக அதிகாரி இரந்தீர் சிங் ஆசிய ஒலிம்பிக் சபையின் (OCA) தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டில் முதல் அரையாண்டில் அமெரிக்காவை முந்தி இந்தியாவானது இரண்டாவது பெரிய 5G கைபேசி சந்தையாக மாறியுள்ளது.
  • இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான 20வது யுத் அபியாஸ்-2024 பயிற்சியானது இராஜஸ்தானில் தொடங்கியது.
  • அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சுமார் 50 நாட்களுக்கும் மேலான ஒரு தற்காலிக அரசாங்கத்திற்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஐரோப்பிய ஒன்றிய பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியரை நியமித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்