இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை தீபாலி தாபா, ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஐன் நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆசியப் பள்ளி மாணவி சாம்பியன் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியில் (ISA) முழு உறுப்பினராக இணைந்த 101வது நாடாக நேபாளம் மாறியுள்ளது.
இந்திய அரசானது, பொது விமானப் போக்குவரத்து தொடர்பான 2வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டினை புது டெல்லியில் நடத்தியது.
சிரியா அணியானது இந்திய அணியினை வீழ்த்தி ஹைதராபாத்தில் நடந்த 4வது இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் (2024) போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு SEMICON இந்தியா நிகழ்வானது உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் நடைபெற்றது.
1979 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் தேதியன்று, "ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு மையம் (CIRDAP)" நிறுவப்பட்டதன் நினைவாக ஜூலை 06 ஆம் தேதியானது உலக ஊரக மேம்பாட்டுத் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.