TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 23 , 2024 5 days 66 0
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கான அமைச்சகம் ஆனது லடாக்கின் லே என்ற பகுதியில் தொழில்நுட்பம் மூலமான கிராமப்புற நிறுவன ஊக்குவிப்பு (CREATE) அமைப்பிற்கான மையத்தைத் திறந்து வைத்துள்ளது.
  • இந்திய ஹாக்கி அணியானது, சீன அணியினை வீழ்த்தி ஐந்தாவது முறையாக 2024 ஆம் ஆண்டிற்கான (சீனாவில் நடைபெற்ற) ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இடமாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்திய நாடானது சுமார் 30 நாடுகளின் பங்கேற்புடன் கூடிய ‘தரங் சக்தி 2024’ எனப் படும் தனது முதல் பன்னாட்டு விமானப் பயிற்சியினை தமிழ்நாட்டில் சூலூர் என்னும் இடத்தில் நடத்தியது.
  • கோபால்பூர் துறைமுகத்தின் 95 சதவீதப் பங்குகளை அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு (APSEZ) மாற்றுவதற்கான முன்மொழிதலுக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்