TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 26 , 2024 58 days 100 0
  • மூன்றாவது உலக உணவு இந்தியா (2024) மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த கணினித் தகவல் தொடர்பு அமைப்பு மாணவி துருவி படேல், 2024 ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா உலக அழகி பட்டத்தினை வென்று உள்ளார்.
  • அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் (DFC) ஆனது இரு அரசாங்கங்களின் முக்கிய முன்னுரிமைகளை வலுப்படுத்துவதற்காக என்று இந்தியாவின் தனியார் துறையில் 70 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இரண்டு முறை உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற நிகத் ஜரீன் தெலுங்கானா காவல்துறையில் ஒரு துணை ஆய்வாளராக (சிறப்புக் காவல்பிரிவு) இணைந்துள்ளார்.
  • அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பானது, ஒப்பீட்டு வட்டி விகிதத்தை – கூட்டு நிதி விகிதம் - 50 அடிப்படைப் புள்ளிகள் அல்லது அரை சதவீதப் புள்ளிகளாக குறைத்து உள்ளது.
  • டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA), உலகளாவிய "மாபெரும் மையங்கள்" என்ற சமீபத்திய விமான நிலையங்கள் தர வரிசையில் முன்னதாக இருந்த 25வது இடத்தில் இருந்து 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை வீழத்தியவர் என்ற மைல்கல்லை எட்டிய 10வது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
  • சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) 68வது பொது மாநாட்டின் தலைவராக ஆஸ்திரியாவுக்கான தென் கொரிய நாட்டின் தூதரான ஹாம் சாங்-வூக் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • தைவான்-சீன நாட்டு குடிமக்களுக்கு இடையேயான தன்பாலின திருமணங்களை தைவான் அரசு அங்கீகரித்து, தம்பதிகள் தங்கள் இணைவினை அரசிடம் பதிவு செய்வதற்கான ஒரு உரிமையை வழங்க உள்ளது.
    • தன்பாலினத் திருமணம் ஆனது 2019 ஆம் ஆண்டு முதல் தைவானில் சட்டப் பூர்வமாக உள்ளது என்ற நிலையில் அது தன்பாலினத் திருமணத்தைச் சட்டப் பூர்வமாக்கிய ஆசியாவின் முதல் நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்