TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 8 , 2018 2273 days 752 0
  • தகவல் தொழில்நுட்ப மையமான ஹைதராபாத்தில் நிஜாமி நகரத்தில் சுவீடனைச் சேர்ந்த வீட்டு அலங்காரப் பொருள் சில்லறை விற்பனையாளரான ஐகியா என்ற பன்னாட்டு நிறுவனம், தனது முதல் இந்திய விற்பனையகத்தை திறந்துள்ளது.
  • இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பெங்களூரு விண்வெளி கண்காட்சியின் 6வது பதிப்பானது இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவனால் தொடங்கி வைக்கப்பட்டது. பெங்களூருவில் நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் கண்காட்சி இந்திய விண்வெளித் திட்டத்தில் தொழிற்துறை பங்களிப்பினை உயர்த்திக் காட்டும்.
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தையும் தாண்டி 2017-18 முதல் 2019-20 வரையில் மத்திய அரசு ஆதரவு பெற்ற சிறப்புத் திட்டமான வனவுயிர் வாழ்விடங்களுக்கான ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை (Integrated Development of Wildlife Habitats) தொடரச் செய்ய ஒப்புதலளித்துள்ளது.
    • இத்திட்டம் மத்திய அரசின் ஆதரவுத் திட்டமான புராஜக்ட் டைகர், புராஜக்ட் எலிபென்ட் மற்றும் வனவுயிர் வாழ்விட மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தேசியத் தலைநகரில் நிலத்தடி நீரை புதுப்பித்து மேம்படுத்தச் செய்வதற்கான குறிப்பிட்ட காலத்தை இலக்காகக் கொண்ட செயல்திட்டத்தை தயாரித்திட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
  • பிரதமரின் தலைமையில் புதுதில்லியில் 31வது மத்திய ஹிந்திக் குழுவின் சந்திப்பு நடத்தப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பீமல் ஜலன் என்பவரை இந்தியாவின் அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிக்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கு தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.
    • முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அப்பதவியிலிருந்து விலகிய பிறகு பீமல் இத்தேடுதல் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
  • Dataset Search என்ற புதிய தேடல் இயந்திரத்தை கூகுள் ஆரம்பித்திருக்கின்றது. இது விஞ்ஞானிகள், தகவல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மற்றவர்கள் தங்கள் பணிக்காக தேவைப்படும் தகவல்களை பெற உதவிடும் வகையில் பலதரப்பட்ட மொழிகளில் இது இயங்கிடும்.
  • அணுசக்தி பாதுகாப்புப் பட்டியலைப் பொறுத்தவரையில் அணுப்பொருட்களை கொண்டு உபயோகிக்கப்படும் ஆயுதங்களை உடைய நாடுகளின் பட்டியலில் “களவுத் திருட்டுக்கான தரவரிசை” (Theft Ranking) என்ற வகையில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது.
    • ஆஸ்திரேலியாவும் சுவிட்சர்லாந்தும் ஆயுதங்களுடன் கூடிய அணுசக்தி பொருட்களை உடைய சக நாடுகளின் மத்தியில் முதலிடங்களைப் பிடித்துள்ளன.
  • இந்தியாவும், பிரான்சும் மூன்று இந்திய நகரங்கள் (நாக்பூர், கொச்சி மற்றும் அகமதாபாத்) பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வினை குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும் வண்ணம் “உங்கள் நகரத்தை தயாராக்குங்கள்” என்ற ஒரு செயல்படுத்து ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய இரயில்வேத் துறையில் “வியாபாரம் செய்வதை எளிமையாக்கல்” முறையை மேம்படுத்த தேசிய போக்குவரத்து நிறுவனமானது (இரயில்வே) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பியூஸ் கோயல் தலைமையிலான இரயில்வே அமைச்சகம் இந்திய இரயில்வேயின் மின்னணு கொள்முதல் அமைப்பு ஆபூர்த்தி (Indian Railways e-procurement system -IREPS என்ற கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சர் புதுதில்லியில் 3 நாட்கள் நடைபெறும் இராணுவ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு 2018 என்ற ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.
    • இது மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகத்தாலும் PHD வர்த்தக மற்றும் தொழிற்சாலை சங்கத்தாலும் இணைந்து நடத்தப்பட்டது.
  • மத்திய இரயில்வே அமைச்சர், உத்திரப்பிரதேச முதல்வருடன் இணைந்து லக்னோவில் “கும்பமேளா 2019” (www.kumbhmela.gov.in) என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்தை துவக்கி வைத்தார். மேலும் அவர்கள் இந்த கும்பமேளா தொடர்பான சமூக ஊடக செயலி ஒன்றையும் துவக்கி வைத்தனர்.
    • இது சுற்றுலாப் பயணிகளுக்கும் புனித யாத்ரீகர்களுக்கும் மேளா தொடர்பான அனைத்து தேவையான தகவல்களான இட வசதி, இரயில் வண்டிகள், வானிலை, போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி ஆகியவற்றை அளிக்கும்.
  • 16 வயதான சௌரப் சௌத்ரி, தென் கொரியாவின் சாங்வான் நகரத்தில் நடைபெறும் ISSF உலக துப்பாக்கிச் சூடு சாம்பியன் போட்டியில் உலக இளையோர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 10 மீட்டர் ரக பிஸ்டல் பிரிவில் முன்பு தான் ஏற்படுத்திய உலக சாதனையை இம்முறை தாமே முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்