TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 2 , 2024 20 hrs 0 min 36 0
  • பத்ம விருது பெற்றவரும் இயற்கை முறை விவசாயியுமான 109 வயது பாப்பம்மாள் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் காலமானார்.
  • எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு ஆனது நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் "சிறந்த எதிர்காலத்திற்கான பலதரப்பு தீர்வுகள்" என்ற கருத்துருவில் நடைபெற்றது.
  • மத்திய அரசானது, புது டெல்லியில் உள்ள வடக்குப் பிராந்திய மின்னாற்றல் குழுவில் இணையப் பாதுகாப்பு நிகழ்வுகளுக்கான எதிர் நடவடிக்கைக்கான குழு – மின்னாற்றல் துறையானது (CSIRT-POWER) தொடங்கப்பட்டது.
  • இந்தியக் கடலோரக் காவல்படையின் (ICG) 41வது படைப் பிரிவினர் மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் ஆனது, VisioNxt மற்றும் AI வகை பிரித்தல் இணையப் புத்தகத்தின் இருமொழி இணைய தளமான “பரிதி 24x25” என்ற இந்தியாவிற்கான ஆடை வடிவமைப்புப் போக்கு புத்தகத்தினை அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • சர்வதேச நாணய முகமையானது, பாகிஸ்தான் நாட்டின் மிகவும் மோசமான பொருளாதார நிலையினை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதல் தவணையுடன் தொடங்கும் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆனது, சமீபத்தில் பாலின முக்கியத்துவத்தினை மையமாகக் கொண்ட ஒரு தேசிய அளவிலான மாநாட்டை புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
    • இந்த நிகழ்வானது, IWWAGE (பெண்கள் மற்றும் சிறுமிகளை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கான முன்னெடுப்பு) உடன் இணைந்து நடத்தப்பட்டது.
  • டாடா மோட்டார்ஸ்-JLR திட்டத்துடன் இணைந்து தமிழ்நாட்டின் 50வது SIPCOT தொழிற்பேட்டையானது பனப்பாக்கத்தில் திறக்கப்பட உள்ளது.
    • அடுத்த ஆண்டில் பதினேழு தொழில் பூங்காக்கள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் சுமார் 15 நாடுகளின் பங்கேற்புடன் “Ocean-24” என்ற பெரிய அளவிலான கடற்படைப் பயிற்சியை ஜப்பான் கடலில் மேற்கொண்டுள்ளன.
  • உலகளாவிய காபி தொழில் துறையினை அங்கீகரித்து மேம்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 01 ஆம் தேதியன்று சர்வதேச காபி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • சைவத்தின் நன்மைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களைக் குறைப்பதில் அது வகிக்கும் முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக என்று ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 01 ஆம் தேதியன்று உலக சைவ உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்