TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 5 , 2024 16 hrs 0 min 34 0
  • தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான திரு எஸ். தமிழ்வாணனை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் சென்னை சமூக சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து ‘தமிழ்நாட்டின் பழங்குடியினர் கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் அளவிலான தேசிய ‘தொல்குடி’ மாநாட்டினை நடத்தின.
  • நிகழ்நேர வானிலை முன்னறிவிப்பு, மழைப்பொழிவு குறித்த தரவு, பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் நீர்த்தேக்க நிலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக, தமிழ்நாடு அரசானது TN-Alert என்ற இருமொழியிலும் செயல்படும் கைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.
  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகள் ஆனது 70 சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • ஜப்பான் நாட்டில் நிகாட்டா என்னுமிடத்தில் நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங், ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியினை 13:11.82 வினாடிகளில் நிறைவு செய்து தனது தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • மகாராஷ்டிர மாநில அரசானது வேத காலத்திலிருந்துத் திகழ்ந்து வரும் அவற்றின் முக்கியத்துவம் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு இன பசுக்களை 'இராஜ்யமாதா-கோமாதா' என்று அறிவித்துள்ளது.
  • இந்திய சர்க்கரை மற்றும் உயிரி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கமானது (ISMA) இந்திய சர்க்கரை மற்றும் உயிரி ஆற்றல் மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • உலகின் மூன்றாவது பெரிய எத்தனால் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான (LCA) தேஜாஸ் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை படைப்பிரிவுத் தலைவர் மோகனா சிங் பெற்றுள்ளார்.
  • மத்திய அரசானது, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த வகையிலான வாழ்க்கை முறைகள் தொடர்பான பல்வேறு நடத்தை மாற்றங்களைத் தூண்டுவதற்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான கருத்தாக்கங்களைப் பெறச் செய்வதற்காக Ideas4LiFE என்ற ஒரு இணைய தளத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • மத்திய அரசானது, இந்தியாவில் 2029 ஆம் ஆண்டிற்குள் கப்பல் பயணச் சுற்றுலாவை சுமார் 1 மில்லியன் பயணிகள் என்ற ஒரு எண்ணிக்கையில் அதிகரிப்பதற்காகவும், சுமார் 400,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கச் செய்வதற்காகவும், 5 ஆண்டு கால பாரத் கப்பல் சுற்றுப்பயண திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்