TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 6 , 2024 48 days 145 0
  • மிகவும் ஆக்கப்பூர்வமிக்க ஒரு செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை பல்வேறு இந்திய மொழிகளில் குடிமக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான, உலகில் முதல் முறையாக அரசினால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு முன்னெடுப்பான பாரத்ஜென் திட்டத்தினை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
  • ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது.
  • விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 27000 ரன்களை எடுத்து, அந்த மைல்கல்லை மிக விரைவில் எட்டிய கிரிக்கெட் வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • இங்கிலாந்தில் நடந்த ப்ரோ சர்க்யூட் ஸ்னூக்கர் போட்டியில், நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மார்க் செல்பியை வீழ்த்தி அந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பினை இஷ்ப்ரீத் சிங் சதா பெற்றுள்ளார்.
  • இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எட்டாவது KAZIND-2024 எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்தரகாண்டில் தொடங்கியது.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துருக்கியில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய நகரத்தின் பல்வேறு இடிபாடுகளில் இருந்து பழமையான கண்மையினை கண்டுபிடித்து உள்ளனர் என்பதன் மூலம் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதர்கள் ஒப்பனை பொருட்களைப் பயன்படுத்தினர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
  • பயோஎன்டெக் என்ற நிறுவனமானது, சிறு உயிரணு சாராத நுரையீரல் புற்றுநோய்க்கு (NSCLC) சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்ட mRNA தடுப்பூசியான BNT116 மருந்திற்கான சர்வதேச மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது.
  • வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) ஆனது வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக 'Arka' மற்றும் 'Arunika' எனப்படும் 'அதிக செயல்திறன் கொண்ட கணினி’ அல்லது HPC அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கேரளாவின் அம்ரித் என்ற நடவடிக்கை மூலம் (ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான நுண்ணுயிர் எதிர்ப்புத் திட்டம்) அம்மாநிலத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகவும் கட்டுப்பாடற்ற பயன்பாட்டில் அதிகபட்ச அளவில் சரிவு பதிவாகியுள்ளது.
    • இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், மருந்துச் சீட்டு இல்லாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விற்பனையைத் தடை செய்த நாட்டின் முதல் மாநிலமாக கேரளா மாறியது.
  • 1990 ஆம் ஆண்டு ஜெர்மன் நாடானது மீண்டும் ஒன்றிணைந்ததன் நினைவாக அங்கு அக்டோபர் 03 ஆம் தேதியன்று ஜெர்மனி ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்