TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 9 , 2024 14 hrs 0 min 18 0
  • இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் ஆனது, இந்தியாவின் மின்சார வழங்கீட்டு கட்டமைப்பு வழியாக நேபாளத்தில் இருந்து வங்காளதேசத்திற்கு 40 மெகாவாட் மின்சாரத்தினை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 13,822 ஜன் ஔஷாதி கேந்திராக்கள் (கடைகள்) நிறுவப்பட்டுள்ளன.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் நோக்கில், சீனா தனது சிறப்பு வகை 'இலகு ரக' சந்திர விண்வெளி உடையின் மீதான வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது, அடுத்த ஆண்டு ரஷ்ய எல்லைக்கு அருகில் ஃபின்லாந்தில் புதிய நிலக் கட்டுப்பாட்டுப் பிரிவினை அமைக்க உள்ளது.
  • 26வது நீர், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி (WETEX-2024) ஆனது துபாயில் நடைபெற்றது.
  • கண்ணூரில் உள்ள கல்லியசேரியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மீ மின் தேக்கி உற்பத்தி ஆலையை கேரள மாநில அரசு திறந்து வைத்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஆயுஷ் மருத்துவ மதிப்பு சார் பயண உச்சி மாநாடு ஆனது, 'ஆயுஷ் துறையில் உலகளாவிய ஒருங்கிணைப்பு: மருத்துவ மதிப்பு சார்ந்த பயணத்தின் மூலம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மாற்றியமைத்தல்' என்ற கருத்துருவுடன் மும்பையில் நடத்தப் பட்டது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள GAIL நிறுவனத்தின் முதல் CBG (அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு) ஆலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.
    • இது நாள் ஒன்றுக்கு 5,000 கிலோ உயிரி-CNG மற்றும் 25 டன் நொதிக்கப்பட்ட உயிரி உரம் தயாரிப்பதற்கு சுமார் 150 டன் நகராட்சி திடக்கழிவுகளை செயல்முறைக்கு உட்படுத்தும்.
  • யுரோநேவல் 2024 எனப்படும் உலகின் மிகப்பெரிய கடற்படைப் பாதுகாப்பு வர்த்தக கண்காட்சியானது நவம்பர் மாதம் பாரீஸில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்