TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 12 , 2024 17 hrs 0 min 30 0
  • ஆசிய மனிதவள மேம்பாட்டு வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையானது ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற அதன் முதன்மைத் திட்டத்திற்கு சுகாதார அமைச்சகத்தின் பிரிவின் கீழ் ‘ஐக்கிய நாடுகள் சபையின் 2024 ஆம் ஆண்டு இடை முகமை பணிக் குழு ((UNIATF - Interagency Task Force) விருதுகளை பெற்றுள்ளது.
  • ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் மலபார் 2024 எனப்படும் கடல்சார் பயிற்சியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
  • சத்தீஸ்கர் மாநில முதல்வர், தம்தாரி மாவட்டத்தில் உள்ள கங்க்ரெல் அணையில் உள்ள இரவிசங்கர் நீர்த்தேக்கத்தில் ஜல்-ஜாகர் மஹோத்சவத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்திய மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற எல்லை கடந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளச் செய்வதை எளிதாக்குவதற்காக வேண்டி இந்தியாவின் UPI மற்றும் UAE நாட்டின் AANI ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • மாலத்தீவுகளுக்கு 400 மில்லியன் டாலர்கள் நிதி உதவி மற்றும் 3,000 கோடி ரூபாய் இருதரப்புப் பண மதிப்பு பரிமாற்றத்தை இந்தியா வழங்கியுள்ளது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது, பல்வேறு அனுமதி அளிக்கப் பட்ட தொடர் சங்கிலி தொழில்நுட்பம் அடிப்படையிலான செயலிகளுக்குத் தேவையான ஆதரவுகளை வழங்குவதற்காக விஸ்வஸ்யா - தொடர் சங்கிலித் தொழில் நுட்பக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்