இந்தியாவின் ஜவுளித் துறையானது வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 350 பில்லியன் டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை உத்தரகாண்டில் நடைபெறவுள்ளது.
ஷார்ஜாவில் (ஐக்கிய அரபு அமீரக நாட்டில்) நடைபெற உள்ள 20வது சர்வதேச கல்விக் கண்காட்சியில், சர்வதேச மாணவர்களை தனது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்கும் நோக்கில் இந்தியா தனது ‘இந்தியாவில் கல்வி பயில்வோம்’ பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
நேபாள நாட்டினைச் சேர்ந்த மலையேறும் வீரரான நிமா ரிஞ்சி ஷெர்பா (18), உலகின் 8,000 மீட்டர் (26,246-அடி) உயரம் கொண்ட 14 சிகரங்களையும் ஏறிய இளம் நபர் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
உலகின் மிகவும் உயரமான 14 சிகரங்களையும் எட்டியவர் என்ற முந்தைய ஒரு சாதனையை மிங்மா கியாபு "டேவிட்" ஷெர்பா (30) என்பவர் வைத்திருந்தார்.