நாகாலாந்தில் உள்ள ஃபெக் மாவட்டத்தின் காவல் ஆய்வாளரான பிரித்பால் கௌர், அமெரிக்காவில் உள்ள மதிப்புமிக்க சர்வதேச காவல்துறைத் தலைவர்கள் சங்கத்தின் (IACP) ‘2024 ஆம் ஆண்டு IACP 40 Under 40’ விருதினைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்ற, பாராளுமன்றக் குழுக்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் (IPU) 149வது கூட்டத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்கினார்.
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க-இந்திய உத்தி சார் கூட்டாண்மை மன்றமானது (USISPF) தனது வருடாந்திர ‘2024 ஆம் ஆண்டு இந்தியத் தலைமைத்துவ உச்சி மாநாட்டினை’ புது டெல்லியில் நடத்தியது.
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர், தொழில்முறை போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையானது சமர்த்தக் எனப்படும் தனது முதல் உள்நாட்டுப் பல்நோக்கு கப்பலினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலத் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தை ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநிலத் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் என்று மறு பெயரிடச் செய்வதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.