இந்திய இரயில்வே நிர்வாகமானது புதிய வந்தே பாரத் இரயில் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளதோடு டெல்லியில் இருந்து பாட்னா வரை 994 கிலோமீட்டர் தொலைவு வரை இயக்கப்பட உள்ள இந்த இரயில் சேவையானது நாட்டின் மிக நீண்ட வந்தே பாரத் இரயில் பயணத்தைக் குறிக்கிறது.
19வது சர்வதேச மருந்து ஒழுங்குமுறை ஆணையங்களின் மாநாடு ஆனது இந்தியாவில் முதன்முறையாக புது டெல்லியில் நடைபெற்றது.
இஸ்ரோ தலைவர் S. சோமநாத், சந்திரயான்-3 விண்கலத்தின் பெரும் குறிப்பிடத்தக்க சாதனைக்காக சர்வதேச விண்வெளிக் கூட்டமைப்பின் (IAF) மிகவும் மதிப்புமிக்க உலக விண்வெளி விருதைப் பெற்றுள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகாருக்கு அடுத்தபடியாக விரிவான குடும்ப சாதிவாரிக் கணக்கெடுப்பினை மேற்கொள்ளும் மூன்றாவது மாநிலமாக தெலுங்கானா மாற உள்ளது.
குஜராத் மாநிலதில் உள்ள ஜாம்நகர் என்று அழைக்கப்படும் நவநகரின் பழைய சமஸ்தானத்தின் மகாராஜா, தனது மருமகனும் (உடன் பிறந்தார் மகன்), முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜாவை அந்தப் பதவிக்கான தனது அடுத்த வாரிசாக அறிவித்துள்ளார்.
நிதித் தொழில்நுட்ப நிறுவனமான நாவி, ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக செயலியில் (UPI) தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் ஐந்தாவது பெரிய பண வழங்கீட்டு சூழல் அமைப்பாக மாறியுள்ளது.
மலையேறு வீரரான அர்ஜுன் வாஜ்பாய் (மகாராஷ்டிரா), ஷிஷாபங்மா (சீனா) மலை உச்சியை அடைந்து, அந்த சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு (ISSF) ஆனது 2025 ஆம் ஆண்டில் ISSF இளையோர் உலகக் கோப்பைப் போட்டியினை இந்தியா நடத்தும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.