'இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்' அதிவிரைவு இரயில்களைத் தயாரிப்பதற்கான 866.87 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தினை BEML எனும் அரசு நிறுவனம் பெற்று உள்ளது.
நல்லமலை வனப்பகுதியில் உள்ள நாகார்ஜுன சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் வளங் காப்பகம் (NSTR), அப்பகுதியில் காணப்படும் சிறுத்தைகளின் எண்ணிக்கையினைக் கொண்டு மதிப்பிடப்பட்ட இந்தியாவின் 55 புலிகள் வளங்காப்பகங்களில் சுமார் 360 சிறுத்தைகளுடன் முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் (NC) துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார்.
இந்தியப் பெண் அறிவியலாளர் சுபா டோலே, சர்வதேச மூளை ஆராய்ச்சி அமைப்பின் (IBRO) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவையானது ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, 2024 ஆம் ஆண்டு வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவினைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
இந்திய ராணுவமானது, அதன் செயல்பாட்டுத் (நடவடிக்கைப் பயன்பாட்டு) தயார் நிலையை மேலும் மேம்படுத்தும் விதமாக தனது முதல் புதுப்பிக்கப்பட்ட T-90 பீஷ்மா பீரங்கியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
UNICEF அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் உள்ள குழந்தைகளுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கும் மூன்றாவது பெரிய நிறுவனமாக இந்திய நிறுவனங்கள் உள்ளன.
குளோபல் SWF என்ற இணைய தளமானது, அதன் இறையாண்மை மிக்க செல்வ வள நிதிகளின் அடிப்படையில், உலகின் பணக்கார நாடாக அபுதாபியை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இணையவெளிப் பாதுகாப்பு தொடர்பான வேலைவாய்ப்புகள் சுமார் 14% அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதில் 10 சதவீத உயர்வுடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து டெல்லியின் தேசியத் தலைநகரப் பகுதி (4%), வீட்டிலிருந்தே செய்யும் பணிகள் (2.2%), மற்றும் ஐதராபாத் (2%) ஆகியவை உள்ளன என்பதோடு மும்பை 2 சதவீதத்துடன் இதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.