TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 11 , 2018 2270 days 723 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆயுஷ் பிரிவில் (Ayush Block) நோயாளிகளுக்கு வர்ம சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.
  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் மலர்வதை கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டமானது செப்டம்பர் 12 ஆம் தேதியை ‘குறிஞ்சி மலர் தினமாக’ அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
    • நீலகிரியில் வெவ்வேறு வகையான 9 வகை குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. இந்தியா முழுவதும் 32 வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன.
  • உறுப்பு தானத்திற்காக காத்திருப்போர் பதிவேட்டில் இந்தியர்கள் பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN - Transplant Authority of Tamilnadu) அறிவித்துள்ளது.
    • வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களது தூதரகத்தில் ‘தடையின்மைச் சான்றிதழைப்’ பெற்று TRANSTAN-ல் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
  • உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவிற்குப் பிறகு அவரது நினைவாக லக்னோவின் புகழ்பெற்ற ‘ஹஸ்ரத்கன்ஞ் சவ்ராஹா’ ஆனது ‘அடல் சவுக்’ என்று பெயர் மாற்றப்படவிருக்கிறது.
    • மேலும் உத்திரப் பிரதேச மாநில அரசானது ஆக்ராவின் பட்டேஸ்வரில் உள்ள வாஜ்பாயின் முன்னோர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாகவும் சுற்றுலாத் தளமாகவும் மாற்ற முடிவு செய்துள்ளது.
  • மத்தியப் பணியாளர், பொது மக்கள் குறைபாடுகள், ஓய்வூதியத் துறை அமைச்சகமானது மத்தியப் பிரதேசத்தின் போபாலில் ‘நல்லாட்சியுடன் கூடிய உயர் இலட்சிய மாவட்டங்களில் கவனத்தை செலுத்துதல்’ மீதான பிராந்தியக் கருத்தரங்கை நடத்தியது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் உள்ள லிப்பா-அசரா வனவிலங்கு சரணாலயத்தின் 4000 மீட்டர் உயரத்தில் பனி சிறுத்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு பனிச் சிறுத்தையானது ‘அழிவு நிலை இனங்கள்’ எனும் வகைப்பாட்டில் இருந்து ‘மறையத்தகு உயிரினங்கள்’ எனும் வகைப்பாட்டிற்கு பாதுகாப்புப் பட்டியலில் நிலை மாற்றப்பட்டுள்ளது.
  • டிரிபிள் ஜம்பரான அர்பிந்த் சிங் IAAF காண்டினன்டல் கோப்பையில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய வீரர் ஆவார். இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • கம்போடியாவின் பிரதமராக ஹூன் சென் மறுமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அர்ஜெண்டினாவின் மென்டோசாவில் G20-ன் முதலாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மீதான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
  • வளைகுடா நாடுகளில் முதலாவதாக கத்தார் நாடானது சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அட்டைகள் மற்றும் சில உரிமைகளை வழங்கவிருக்கிறது.
    • இந்தப் புதிய விதியின்படி, புதிய நிரந்தர குடியிருப்பு அட்டைகளைப் பெற்றவர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள். மேலும் இந்த அடையாள அட்டையைப் பெற்றவர்கள் கல்வி, சுகாதார சேவைகள் உள்பட கத்தார் நாட்டின் நல உதவிகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • வங்காள தேசத்தின் கடற்படை கப்பலான ’சமுத்ரா ஜாய்’ நல்லிணக்கப் பயணமாக 4 நாட்களுக்கு விசாகப்பட்டினம் (கிழக்குக் கடற்படை) வந்தடைந்தது.
  • இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (IISER - Indian Institute of Science Education) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மலிவு விலையிலான மற்றும் நெகிழத்தக்க சூரிய மின்கலத்தை வைட்டமின் B12-ன் செயற்கை வகையைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.
  • அமெதியின் பிந்தாரா தாக்கூர் கிராமத்தில் உள்ள மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொது சேவை மையத்தில் “டிஜிட்டல் கிராமத்தை” மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி துவக்கி வைத்தார்.
    • டிஜிட்டல் கிராமத் திட்டத்தின்படி, வை-பை அளிக்கும் இடம், LED விளக்கு தயாரித்தல், சுகாதாரத் துணிகள் தயாரிக்கும் பிரிவு மற்றும் பிரதம மந்திரி டிஜிட்டல் கல்வி முன்முயற்சி உள்ளிட்ட 206 திட்டங்கள் மக்களுக்கு அளிக்கப்படும்.
  • அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற்ற முதலாவது ஜப்பானியப் பெண் வீராங்கனையாக நவோமி ஒசாகா உருவெடுத்துள்ளார்.
  • புது தில்லியில் பித்யூத் சக்கரவர்த்தி எழுதிய ‘இந்திய அரசியலமைப்பியல் - ஒரு கருத்துத் திட்டம்’ என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்