TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 23 , 2024 5 days 63 0
  • பாரத் 6G அலையன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த சர்வதேச 6G கருத்தரங்கம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • சத்தீஸ்கரில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) நிறுவனமானது, நாட்டின் 216வது AMRIT (மலிவு விலையிலான மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கான நம்பகமான உள்வைப்பு சாதனங்கள்) மருந்தகத்தினைத் திறந்து வைத்துள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பானது இரண்டாவது சர்வதேச மெத்தனால் கருத்தரங்கம் மற்றும் 2024 ஆம் ஆண்டு கண்காட்சி ஆகியவற்றை புது டெல்லியில் நடத்தியது.
  • புது டெல்லியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடவர்களுக்கான 3 நிலைகளிலான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • அரசு ஊழியர்களின் மிகவும் தனிப்பட்ட மற்றும் நிறுவனத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘கர்மயோகி சப்தா’ என்ற தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இந்திய இராணுவத்தின் சுதர்சன் சக்ரா படைப்பிரிவானது, உத்தரப் பிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில் “ஸ்வாவ்லம்பன் சக்தி பயிற்சி” என்ற முக்கியப் பயிற்சியை நடத்தி வருகிறது.
  • இந்தோனேசியாவின் 8வது அதிபராக பிரபோவோ சுபியாண்டோ பதவியேற்றுள்ளார்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்