TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2024 7 days 47 0
  • சென்னை மெட்ரோ இரயில் சேவையின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் அறிமுகப் படுத்தப் பட உள்ள ஓட்டுநரின்றி இயங்கும் முதல் இரயிலின் முதல் சோதனை ஓட்டம் ஆனது அக்டோபர் 26 ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
  • பொது மக்களிடையே பருவநிலை பற்றிய விழிப்புணர்வை வெகுவாக அதிகரிக்கவும், பெண்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் ‘பருவநிலைப் போராளிகள்’ எனும் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு, மின்சாரத்தில் இயங்கும் 100 மூன்று சக்கர வாகனங்களை தமிழக அரசு வழங்க உள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றிற்கான தனது முதல் சர்வதேச முதன்மை மையத்தினை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் தொடங்க உள்ளது.
  • இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள தனிநபர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதித்த இரு குழந்தைக் கொள்கையை நீக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
  • பாகிஸ்தானின் தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தினை மூன்றாண்டுகளாக குறைத்து வரம்பு நிர்ணயிக்கும் சர்ச்சைக்குரிய 26வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை பாகிஸ்தானின் மேலவை நிறைவேற்றியுள்ளது.
  • எகிப்து நாடானது உலக சுகாதார அமைப்பினால் மலேரியா இல்லாத ஒரு நாடாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் கபோ வெர்டே நாட்டிற்கு அடுத்தபடியாக 2024 ஆம் ஆண்டில் இந்த நிலையை அடைந்த உலகின் இரண்டாவது நாடாக இது திகழ்கிறது.
  • கார்கில் போரின் போது உயிரிழந்த படைத் தலைவர் அமித் பரத்வாஜின் உயிர் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையில் லடாக்கிலுள்ள கார்கில் மாவட்டத்தில் கக்சர் என்ற பாலத்திற்கு கேப்டன் அமித் பரத்வாஜ் சேது என பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான HDFC வங்கியானது, சிங்கப்பூரில் தனது வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக தனது முதல் கிளையைத் தொடங்கி உள்ளது.
  • சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் 6வது கூட்டமானது புது டெல்லியில் நடைபெற உள்ளது.
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, 120 நாட்களாக இருந்த பயணச்சீட்டு முன்பதிவு காலத்தை 60 நாட்களாக குறைத்துள்ளது என்பதோடு இது நவம்பர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
  • பாப்பனம்கோடு என்னுமிடத்தில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) தேசியப் பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன (NIIST) வளாகத்தில் ஆயுர்வேத ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம் நிறுவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்