காமராஜர் துறைமுகம் இந்தியாவின் 12வது முக்கியத் துறைமுகமாக அறிவிக்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரேட் நிக்கோபார் தீவின் கலாத்தியா விரிகுடாவில் உள்ள மாபெரும் சர்வதேசக் கொள்கலன் கப்பல் போக்குவரத்துத் துறைமுகம் (ICTP) ஆனது 13வது முக்கியத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
S4* என குறிப்பிடப்படுகின்ற, அணுசக்தியால் இயங்கும் இந்தியாவின் நான்காவது உந்து விசை எறிகணை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஆனது விசாகப் பட்டினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சத்தீஸ்கரின் சர்குஜா, மத்தியப் பிரதேசத்தின் ரேவா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் மூன்று புதிய விமான நிலையங்கள் திறக்கப் பட்டு உள்ளன.
இந்திய அரசாங்கம் ஆனது, சர்தார் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு ஆண்டு கால நாடு தழுவிய அளவில் கொண்டாட உள்ளது.
போபால் நகருக்கு அருகில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் இரத்தபானி வனவிலங்கு சரணாலயம் ஆனது மாநிலத்தின் எட்டாவது புலிகள் வளங்காப்பகமாக அறிவிக்கப் பட உள்ளது.
மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலா என்னுமிடத்தில் நடத்தப் பட்ட 2024 ஆம் ஆண்டு வில் வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், மகளிருக்கான ரீகர்வ் (பின்னோக்கி வளைந்த வில்) போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்த ஊர்மிளா சௌத்ரி 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இன வெறி எதிர்ப்பு சாம்பியன்ஷிப் விருதை வென்றுள்ளார்.
இஸ்ரேல் நாடானது ஆசிய மேம்பாட்டு வங்கியில் (ADB) அதன் 69வது உறுப்பினராகவும் 20வது பிராந்தியம் சாராத உறுப்பினராகவும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
கூகுள் நிறுவனமானது, தனது மூத்த துணைத் தலைவரும் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் முன்னாள் மாணவருமான பிரபாகர் ராகவனை தனது புதியத் தலைமை தொழில்நுட்ப வல்லுநராக நியமித்துள்ளது.
பிரவாசி பரிஷை எனப்படும் 2024 ஆம் ஆண்டு தூதரகத்தின் முதன்மையான புலம் பெயர் மக்களின் ஈடுபாட்டு நிகழ்வானது, ரியாத் நகரில் உள்ள தூதரக அரங்கத்தில் தொடங்கப்பட்டது.
"இந்தியாவின் செம்மொழிகள்" என்ற தலைப்பிலான இந்த ஒரு வார காலத்தியக் கலாச்சாரக் கொண்டாட்டம் ஆனது நாட்டின் மிக வளமான மொழியியல் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.