TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2024 22 days 57 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகமானது 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான (IFFI) "கவன ஈர்ப்பு நாடாக" ஆஸ்திரேலியாவை அறிவித்துள்ளது.
  • மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் ஆனது, 2025 ஆம் ஆண்டில் இந்தியர்களால் பயணம் மேற்கொள்ள அதிகம் விரும்பப்படும் இடமாக மாறியுள்ளது.
  • நடிகர் தாராசிங் குரானா, மனநலப் பிரச்சனைகள் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக 'Commonwealth Year of Youth Champion' என்னும் மகாத்மா காந்தி தலைமைத்துவ விருதைப் பெற்றுள்ளார்.
  • 11வது ஆசிய தூய்மை ஆற்றல் உச்சி மாநாடு (ACES) ஆனது சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது.
  • இந்திய இராணுவத் தளவாட ஏற்றுமதிக்கான முதல் மூன்று வாடிக்கையாளர்களாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் உருவெடுத்துள்ளன.
  • உலகளாவியச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வரைபடம் எனப்படுகின்ற ஒரு புதிய வளங்காப்பு முன்னெடுப்பானது, பல உலகளாவியச் சுற்றுச்சூழல் அமைப்புகளை வரைபடமாக்குவதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்குமான ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த வளத்தை வழங்குவதற்கான முன்னெடுப்பாகத் தொடங்கப் பட்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் பரஸ்பர நிதியின் மொத்த முதலீட்டாளர் எண்ணிக்கையானது 50.1 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்